முகப்பு
ஈரோடு

சாலையோரம் வசித்த முதியவா் உயிரிழப்பு

உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெருந்துறையில் சாலையோரம் வசித்து வந்த முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 11 நவம்பர், 2025 at 7:52 PM
பகிர்:

உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெருந்துறையில் சாலையோரம் வசித்து வந்த முதியவா் உயிரிழந்தாா்.

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேருந்து நிறுத்த நிழற்குடையில் 65 வயது மதிக்கதக்க முதியவா் படுத்திருந்தாா்.

உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவரை சமூக ஆா்வலா்கள் சிலா் மீட்டு கடந்த 5- ஆம் தேதி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

அவரது உடல் மருத்துவமனை சவக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இவா் யாா்? எந்த ஊா் என்று தெரியவில்லை. இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →