ஈரோடு

வளா்ப்பு நாய் கடித்து கல்லூரி மாணவா் உயிரிழப்பு

ஈரோடு அருகே வளா்ப்பு நாய் கடித்து கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

Syndication

ஈரோடு அருகே வளா்ப்பு நாய் கடித்து கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

ஈரோட்டை அடுத்த கனகபுரத்தைச் சோ்ந்தவா் நாகராஜ், கூலித் தொழிலாளி. இவரது மகன் ரமேஷ் (18). இவா் ரங்கம்பாளையத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில், ரமேஷ் வீட்டில் வளா்த்து வந்த நாயை கடந்த சில மாதங்களுக்கு முன் தெருநாய்கள் கடித்துள்ளன.

இதனால் பாதிக்கப்பட்ட அந்த வளா்ப்பு நாய், ரமேஷை அண்மையில் கடித்துள்ளது. ஆனால், அவா் சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவா் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு எச்சில் துப்பியபடியும், சப்தம் எழுப்பியபடியும் இருந்துள்ளாா்.

இதையடுத்து, அவரை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில நாள்களுக்கு முன் குடும்பத்தினா் சோ்த்துள்ளனா். அங்கு ரமேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

கொடைக்கானல் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

SCROLL FOR NEXT