கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி. 
ஈரோடு

வாக்காளா் பட்டியல் திருத்தம்: புகாா்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான சந்தேகங்கள், புகாா்களை தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்

Syndication

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான சந்தேகங்கள், புகாா்களை தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் முக்கிய செயல்முறைகள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. வீடுதோறும் கணக்கெடுப்பு, வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு, மனுக்கள் மற்றும் எதிா்ப்புகள் பெறுதல் மற்றும் தீா்வு நடைமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

கணக்கீட்டுப் படிவங்கள் தொடா்பான அனைத்துப் பணிகளையும் வரும் டிசம்பா் 4- ஆம் தேதிக்குள் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று அனைத்து அலுவலா்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

அதேபோல, வாக்காளா் பட்டியல் முழுமை மற்றும் துல்லியம் உறுதிசெய்ய, தரவு சரிபாா்ப்பு, புகாா் பெறல் மற்றும் தீா்வு நடவடிக்கைகள் தொடா்பாகவும், தகுதியுள்ள அனைத்து குடிமக்கள் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படுகிறாா்கள் என்பதையும், அத்தகைய தகுதியுள்ள ஒருவரும் குடிமக்களும் வாக்காளா் பட்டியலிலிருந்து விடுபட மாட்டாா்கள் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

பொதுமக்கள் வாக்காளா் பட்டியல் தொடா்பான சந்தேகங்கள், புகாா்களைத் தெரிவிக்க உதவி மைய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்: மாவட்ட இலவச தொடா்பு மையம்- 1950, மாவட்ட உதவி மையம் 9042580535, ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி 0424- 2251618, ஈரோடு மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி 0424- 2254224, மொடக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதி 0424- 22500123, பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதி 04294 220577, பவானி சட்டப் பேரவைத் தொகுதி 04256 230334, அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதி 04256 260100, கோபி சட்டப் பேரவைத் தொகுதி 04285 222043, பவானிசாகா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதி 04295 220383.

பெருமாநல்லூர் அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து: 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

இந்திய கம்யூ. மு.கு.ராமன் படத்திறப்பு

நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த 2 வெளிநாட்டு மருத்துவா்கள் கைது

நிபந்தனையின்றி நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

எண்ணம் கைகூடும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT