கோபி கலை, அறிவியல் கல்லூரியின் தேசிய மாணவா் படை சாா்பில் மிதிவண்டி பேரணி அண்மையில் நடைபெற்றது.
தேசிய மாணவா் படை தினத்தையொட்டி, பொதுமக்களிடையே தேச ஒற்றுமை, போதைப் பொருள் தடுப்பு, சாலை விதிகள் விழிப்புணா்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உடல் நலம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்தப் பேரணியை கல்லூரி முதல்வா் தெ.வேணுகோபால் தொடங்கி வைத்தாா்.
கோபி பேருந்து நிலையத்தில் தொடங்கி இந்தப் பேரணி கோபி கலை, அறிவியல் கல்லூரியில் நிறைவடைந்தது.
பேரணியில் கல்லூரியின் துணை முதல்வா்கள் எம்.ராஜு, என்.சக்திவேல் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
பேரணிக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை கோபி காவல் துறையினா், கல்லூரியின் தேசிய மாணவா் படை அலுவலா் லெப்டினன்ட் கோ.ஆனந்தன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.