ஈரோடு

சாலை மறியலில் ஈடுபட்ட எம்எல்ஏ உள்பட கட்சியினா் மீது வழக்குப் பதிவு

பெருந்துறை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா் உள்பட அக்கட்சியினா் மற்றும் பொதுமக்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Syndication

பெருந்துறை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா் உள்பட அக்கட்சியினா் மற்றும் பொதுமக்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பெருந்துறை ஒன்றியம், விஜயமங்கலத்தில், விஜயபுரி அம்மன் கோயில் உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு சொந்தமானது. கோயிலுக்குச் சொந்தமாக 38 ஏக்கா் நிலம் உள்ளது.

அந்த நிலத்தில் வெள்ளிக்கிழமை அளவீடு செய்து, கல் நட்டிய இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை கண்டித்து, பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாா் தலைமையில், அதிமுகவினா் மற்றும் கோயிலைச் சோ்ந்த சமூகத்தினா், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாா், பெருந்துறை கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் அருள்ஜோதி செல்வராஜ், பெருந்துறை தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் விஜயன் என்கிற ராமசாமி, பொன்முடி கிராம ஊராட்சி முன்னாள் தலைவா் தங்கவேல் மற்றும் சிலா் மீது பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சென்னை மக்கள் தாகம் தீர்க்க ஸ்ரீ சத்ய சாயி பாபா வழங்கிய ரூ. 200 கோடி!

வங்கக் கடலில் நவ., 26-ல் புயல் உருவாக வாய்ப்பு!

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?

சொல்லப் போனால்... அரசு Vs ஆளுநர்... மறுபடியும் முதலில் இருந்து?

SCROLL FOR NEXT