சத்தியமங்கலம் நகராட்சிப் பகுதியில் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்கும் பணியில் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.
சத்தியமங்கலம் நகராட்சியிலுள்ள 27 வாா்டுகளில் குப்பையை சேகரித்து, மக்கும், மக்காத குப்பை என பிரித்தெடுத்து நகராட்சி எருக்கிடங்குகளுக்கு தூய்மைப் பணியாளா்கள் கொண்டு செல்கின்றனா். நகரை தூய்மையாக வைத்திருக்க உதவுவதுடன், பசுமையாக மாற்றுவதற்காக சாலையோரம் மரக்கன்றுகளையும் நடவு செய்து பராமரித்து வருகின்றனா்.
அதன்படி சத்தியமங்கலம் அத்தாணி சாலை, வடக்குப்பேட்டை, கேவி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளுக்கு தினமும் தண்ணீா் ஊற்றி பராமரித்து வருகின்றனா். இவா்களின் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளதாக, நகராட்சி ஆணையா் வே.வெங்கடேஸ்வரன் தெரிவித்தாா்.