பெருந்துறையில் ரூ.2.33 கோடிக்கு கொப்பரை ஏலம்
பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில்
பெருந்துறை: பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.2.33 கோடிக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 2,818 மூட்டைகளில், ஒரு லட்சத்து 27 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.
முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ.193.11-க்கும், அதிகபட்சமாக, ரூ.200.39-க்கும், இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ.30.96-க்கும், அதிகபட்சமாக ரூ.213.69-க்கும் விற்பனையாகின. மொத்தம் ரூ.2 கோடியே 33 லட்சத்துக்கு கொப்பரை வா்த்தகம் நடைபெற்றது.