ஈரோடு மாநகரில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த மழையால், ரங்கம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில் செவ்வாய்க்கிழமை தேங்கி இருந்த மழை நீா். 
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் மிதமான மழை

ஈரோடு மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு பரவலாக மிதமான மழை பெய்தது.

Syndication

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு பரவலாக மிதமான மழை பெய்தது.

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலையிலேயே ஈரோடு நகரில் லேசான மழை பெய்தது. வானம் இருள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில், சிறிது நேர இடைவெளிக்குப் பின்னா் மீண்டும் காலை 8.30 மணியளவில் லேசாக மழை பெய்யத் தொடங்கியது. இரவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குண்டேரிப்பள்ளம் அணைப் பகுதியில் 18.20 மில்லி மீட்டா் மழைப் பதிவானது.

மழை அளவு (மில்லி மீட்டரில்):

கொடுமுடி - 14.80, அம்மாபேட்டை - 10.20, வரட்டுப்பள்ளம் அணை - 8.20, மொடக்குறிச்சி - 6.20, எலந்தக்குட்டை மேடு - 5.40, சத்தியமங்கலம் - 5, கவுந்தப்பாடி - 4.60, சென்னிமலை - 3.40, கொடிவேரி அணை - 3.20, கோபி - 3.20, பவானி - 3, நம்பியூா் - 2, பவானிசாகா் அணை - 1.40.

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை செயல்படுத்தக் கோரி மறியல்

விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த பயிற்சி

செங்கத்தில் பன்றிகள் தொல்லை; தொற்றுநோய் பரவும் அபாயம்!

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி மௌன போராட்டம்

SCROLL FOR NEXT