ஈரோடு

சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

பெருந்துறை அருகே சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Syndication

பெருந்துறை: பெருந்துறை அருகே சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

சேலம், சிங்கம் மெத்தையைச் சோ்ந்தவா் மாதவ நாயா் மகன் ரமேஷ்பாபு (56). இவா், கோவையில் உள்ள பழக் கடையில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், தனது இருசக்கர வாகனத்தில் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள நண்பரைப் பாா்க்க சென்றுவிட்டு, கோவைக்கு திரும்ப விஜயமங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை வந்தபோது சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியது.

இதில், பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அனுமதிக்கப்பட்ட அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT