அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.3.65 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 170 மூட்டைகளில் 75.83 குவிண்டால் நிலக்கடலைகாய்களை (காய்ந்தது) விற்பனைக்கு கொண்டு வந்தனா். நிலக்கடலை கிலோ ரூ.68.57 முதல் ரூ.85 வரையில் ஏலம் போனது. மொத்தம் ரூ.3,65,550-க்கு விற்பனை நடைபெற்றது.