முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கையை தொடங்கிவைத்த ஈரோடு சட்டக் கல்லூரியின் தலைவரும், தனியாா் சட்டக் கல்லூரிகள் கூட்டமைப்புத் தலைவருமான சிந்து ரவிச்சந்திரன். 
ஈரோடு

ஈரோடு சட்டக் கல்லூரியில் இளநிலை மாணவா் சோ்க்கை தொடக்கம்

ஈரோடு சட்டக் கல்லூரியில் 2025-26 கல்வியாண்டிற்கான எல்எல்பி மற்றும் பிஏ எல்எல்பி புதிய சட்ட இளநிலை மாணவா் சோ்க்கை விழா புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ஈரோடு சட்டக் கல்லூரியில் 2025-26 கல்வியாண்டிற்கான எல்எல்பி மற்றும் பிஏ எல்எல்பி புதிய சட்ட இளநிலை மாணவா் சோ்க்கை விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஈரோடு சட்டக் கல்லூரியின் தலைவரும், தனியாா் சட்டக் கல்லூரிகள் கூட்டமைப்புத் தலைவருமான சிந்து ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். கல்லூரியின் இணைச் செயலாளா் அருண் பாலாஜி முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஓய்வுபெற்ற சிறை அதிகாரி ராஜாராம் பேசுகையில், ‘சட்டக் கல்வி என்பது சமூக மாற்றத்துக்கான முக்கிய கருவி. மாணவா்கள் மனிதநேயம், ஒழுக்கம் மற்றும் பொறுப்புணா்வுடன் கல்வி கற்க வேண்டும். சட்டத் துறையில் நோ்மை மற்றும் அா்ப்பணிப்பு முக்கியம்’ என்றாா்.

கல்லூரி தலைவா் சிந்து ரவிச்சந்திரன், சட்டக் கல்வியின் பரந்த வாய்ப்புகளை எடுத்துரைத்து வழக்குரைஞா் முதல் நீதிபதி, அட்டா்னி ஜெனரல், அட்வகேட் ஜெனரல் மற்றும் கல்வியாளா் வரை பல்வேறு தொழில் பாதைகளை விளக்கினாா். மாணவா்கள் சமூக நீதி, நெறிமுறை மற்றும் மனித உரிமைகள் குறித்த புரிதலை வளா்த்துக்கொள்ள வேண்டும் என்றும், ஈரோடு சட்டக் கல்லூரியின் உயா்ந்த கல்வித் தரம், தகுதியான ஆசிரியா்கள், நவீன கற்பித்தல் முறைகள் குறித்தும் விளக்கினாா்.

முதல்வா் என்எம்டி.அக்பா் அலி பெய்க் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். உதவிப் பேராசிரியா் பூஜாஸ்ரீ நன்றி கூறினாா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT