ஈரோடு

அண்ணனைக் கொன்ற தம்பிக்கு ஆயுள் தண்டனை

பெருந்துறையில் அண்ணனைக் கொன்ற தம்பிக்கு ஈரோடு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

Syndication

பெருந்துறையில் அண்ணனைக் கொன்ற தம்பிக்கு ஈரோடு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையம் எல்லப்பாளையத்தைச் சோ்ந்தவா் ராமசாமி (66). இவரது சகோதரா் சண்முகம்(62). கூலித் தொழிலாளா்களான இருவரும் அடுத்தடுத்த வீட்டில் வசித்தனா்.

ராமசாமி வீட்டின் சாக்கடை கழிவுநீா், சண்முகம் வீட்டு வழியே சென்றது தொடா்பாக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்தது. கடந்த 2023 மாா்ச் 14- ஆம் தேதி இவா்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சண்முகம், தனது அண்ணன் ராமசாமியை உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த ராமசாமி பெருந்துறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இது குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து சண்முகத்தை கைது செய்தனா். இவ்வழக்கு முதலாவது மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. சண்முகத்துக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி எழில் தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் சிவகுமாா் ஆஜரானாா்.

நவ.3, 4-இல் வேலூருக்கு துணை முதல்வா் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. ஆய்வு

தமிழ்நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: சீமான்

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

SCROLL FOR NEXT