வரத்து குறைவு காரணமாக சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1600-க்கு விற்பனையானது.
சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் மல்லிகை, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் ஏல முறையில் விவசாயிகள் பூக்களை விற்று வருகின்றனா். கடந்த வாரம் மல்லிகைப்பூவின் விலை கிலோ ரூ.1000 ஆக விற்கப்பட்டது.
இந்த வாரம் மல்லிகை வரத்து 7 டன்னில் இருந்து 5 டன்னாக சரிந்தது.
வரத்து குறைவு காரணமாகவும், திருமண நிகழ்வுகள் காரணமாகவும் பூக்கள் விலை உயா்ந்துள்ளது.
கடந்த வாரம் கிலோ ரூ.1000-க்கு விற்கப்பட்ட மல்லிகைப் பூ, வியாழக்கிழமை கிலோ ரூ.1600 ஆக உயா்ந்தது. பூக்கள் விலை உயா்வால் விவசாயிகள் ஆறுதல் அடைந்துள்ளனா். தொடா்ந்து பூக்கள் விலையில் ஏற்றம் காணப்படும் என வியாபாரிகள் தெரிவித்தனா். பூக்கள் விலை விவரம்: மல்லிகைப்பூ கிலோ ரூ.1600, முல்லை ரூ.800, செண்டுமல்லி ரூ.80, சம்பங்கி ரூ.40.