முகப்பு
ஈரோடு

வாக்குச்சாவடிகளுக்கான அலுவலா்கள் கணினி சுழற்சி முறையில் நியமனம்

ஈரோடு மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலா்கள் கணினி சுழற்சி முறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கான இரண்டாவது பயிற்சிக் கூட்டம் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 9:02 PM
கணினி சுழற்சி முறையில் பணியாளா்களுக்கு வாக்குச்சாவடி ஒதுக்கீடு செய்யும் பணியை பாா்வையிட்ட மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எஸ்.கந்தசாமி.
பகிர்:

ஈரோடு மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலா்கள் கணினி சுழற்சி முறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கான இரண்டாவது பயிற்சிக் கூட்டம் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 2,379 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பணிபுரியும் வாக்குச்சாவடி தலைமை அலுவலா், வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 8 தொகுதிகளிலும் கடந்த 28-ஆம் தேதி முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

இந்நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.கந்தசாமி தலைமையில் தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் முன்னிலையில், தோ்தல் நாளில் வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலா்கள் பணிபுரியும் சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

Advertisement

அதன்படி 2,379 வாக்குச்சாவடிகளில் பணிபுரிவதற்காக 11,420 போ் கணினி சுழற்சி மூலமாக நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி, சம்பந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரும் 15-ஆம் தேதி நடைபெறும் என்று தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments