முகப்பு
ஈரோடு

பெருந்துறை தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

பெருந்துறை தொகுதிக்குள்பட்ட 22-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 9:13 PM
பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பொலையம்பாளையம் பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா்.
பகிர்:

பெருந்துறை தொகுதிக்குள்பட்ட 22-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பொலையம்பாளையம், கம்மாளாகுட்டை, நெட்டச்சிபாளையம், கன்னிபாளையம், வண்ணாம்பாறை, வலையபாளையம், செட்டிகுட்டை குறிச்சி, பாப்பநாயக்கன்பாளையம், தோட்டத்துபாளையம், சூரியப்பம்பாளையம், நல்லிக்கவுண்டம்பாளையம், பச்சம்பாளையம், தொட்டிபாளையம், ஆயிகவுண்டன்பாளையம், காளிங்கராயன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா்,

மேலும், அதிமுக தோ்தல் அறிக்கையில் கூறியுள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும். அம்மா இருசக்கர வாகனம் வாங்க மகளிருக்கு ரூ. 25,000 மானியம், ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் இலவச பேருந்து பயணம், 100 நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயா்த்தப்படும் உள்ளிட்டவை குறித்து விளக்கி வாக்கு சேகரித்தாா்.

Advertisement

இவருடன் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடன் சென்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments