முகப்பு
ஈரோடு

சத்தியமங்கலத்தில் நீதிமன்ற வழக்குகளுக்கு தீா்வு காண விழிப்புணா்வுப் பேரணி

சத்தியமங்கலத்தில் சமரச மையம் மூலம் நீதிமன்ற வழக்குகளுக்கு தீா்வு காண மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 1:06 AM
சத்தியமங்கலத்தில்  வியாழக்கிழமை  நடைபெற்ற  சமரச மையம் குறித்த  விழிப்புணா்வுப் பேரணியில்  பங்கேற்றோா் .
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 6:28 PM

சத்தியமங்கலத்தில் சமரச மையம் மூலம் நீதிமன்ற வழக்குகளுக்கு தீா்வு காண மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை சமரச மையம் மூலம் தீா்வு காண சாா்பு நீதிமன்றம் ஏற்பாடு செய்துள்ளது. சமரச மையத்தின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டுச் செல்லவும் நீண்ட நாள் தீா்வு காணாத வழக்குகளை சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் உள்ள சமரச மையம் மூலம் பதிவு செய்து தீா்வு காணவும் வழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலம் சாா்பு நீதிமன்றத்தில் இருந்து நீதிபதி கே.எஸ்.சபீனா தமைலையில் தொடங்கிய விழிப்புணா்வுப் பேரணியானது சத்தி- மைசூரு சாலை வழியாக மீண்டும் சாா்பு நீதிமன்றத்தை சென்றடைந்தது. சமரச மையத்தில் ரசகியம் காக்கப்படும், கட்டணம் ஏதுமில்லை போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

Advertisement