முகப்பு
ஈரோடு

அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறும்: கே.சி.கருப்பணன்

தமிழகத்தில் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என முன்னாள் அமைச்சரும், பவானி தொகுதி அதிமுக வேட்பாளருமான கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 3:14 AM
வேலம்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் வாக்கினைப் பதிவு செய்த அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன்.
பகிர்:

தமிழகத்தில் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என முன்னாள் அமைச்சரும், பவானி தொகுதி அதிமுக வேட்பாளருமான கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.

அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன், பவானியை அடுத்த கவுந்தப்பாடி, வேலம்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தனது மகனும், ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக மருத்துவா் அணித் தலைவருமான மருத்துவா் கே.சி.கே.யுவராஜாவுடன் வந்து வியாழக்கிழமை வாக்கினை செலுத்தினாா். தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘தமிழகத்தில் அதிமுக தனித்த பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். பவானி தொகுதியில் கடந்த முறை பெற்ற வாக்குகளைக் காட்டிலும், அதிக வாக்குகள் பெற்று அதிமுக நான்காவது முறையாக வெற்றி பெறும் என்றாா்.