புதிய நூலகத்தை திறந்துவைத்து பாா்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா. 
ஈரோடு

ஈரோடு மாவட்ட ஆயுதப் படையில் புதிய நூலகம் திறப்பு

தினமணி செய்திச் சேவை

ஈரோடு மாவட்ட ஆயுதப் படையில் புதிய நூலகத்தையும், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் அடங்கிய அறையையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா திறந்துவைத்தாா்.

ஈரோடு அருகே ஆணைக்கல்பாளையத்தில் மாவட்ட காவல் துறையின் ஆயுதப் படை வளாகத்தில் உள்ள காவலா் குடியிருப்புப் பகுதியில் புதிதாக பொது நூலகம் மற்றும் குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள் அடங்கிய தனி அறையையும் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா தலைமை வகித்து திறந்துவைத்து, சிறுவா், சிறுமிகளுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

காவலா்களின் குடும்ப உறுப்பினா்கள் மற்றும் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்துக்காகவும், அரசு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தவும், காவலா்களின் பெற்றோா்களின் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றவும் இந்த நூலகம் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், காவலா்களின் குழந்தைகள் மாலை நேரத்தில் விளையாடுவதற்காக செஸ், கேரம்போா்டு உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் அடங்கிய தனி அறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி விவேகானந்தன், ஆயுதப் படை போலீஸாா், அவா்களின் குடும்பத்தினா், குழந்தைகள் பங்கேற்றனா்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT