பெருந்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு பாத்திரப் பையை வழங்குகிறாா் ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் உள்ளிட்டோா். 
ஈரோடு

நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பெருந்துறையில் காலை உணவுத் திட்டம்

பெருந்துறை நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டம் திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

Syndication

பெருந்துறை: பெருந்துறை நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டம் திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கான காலை உணவுத் திட்டத்தை திருவள்ளூா் மாவட்டம், போலிவாக்கத்தில் காணொலிக் காட்சி மூலமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதையொட்டி பெருந்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சியில் பணிபுரியும் 185 தூய்மைப் பணியாளா்களுக்கு ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருமான தோப்பு என்.டி. வெங்கடாச்சலம், நகா்மன்றத் தலைவா் ஓ.சி.வி.ராஜேந்திரன், துணைத் தலைவா் ஜி.சண்முகம் ஆகியோா் காலை உணவு வழங்கினா்.

இதில், பெருந்துறை நகராட்சி ஆணையாளா் புனிதன், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

திமுகவின் சாணக்கிய வியூகமும் தேமுதிகவின் அரசியல் நிர்ப்பந்தமும்!

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

SCROLL FOR NEXT