முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடக்கம்

வெள்ளக்கோவில் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 9:48 PM
தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையா் சி.மனோகரன், நகா்மன்றத் தலைவா் கனியரசி முத்துகுமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

மாநிலம் முழுவதும் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு விலையில்லா காலை உணவு வழங்கும் திட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், நகராட்சிப் பகுதிகளுக்கும் இந்த திட்ட விரிவாக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

Advertisement

இதையொட்டி, வெள்ளக்கோவில், உப்புப்பாளையம் பகுகியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

இது குறித்து நகா்மன்றத் தலைவா் கனியரசி முத்துகுமாா் கூறுகையில், நகராட்சியில் பணியாற்றும் 167 தூய்மைப் பணியாளா்களுக்கும் நாள்தோறும் காலை 8-9 மணிக்குள் வெவ்வேறு வகையிலான உணவுகள் இலவசமாக வழங்கப்படும் என்றாா்.

நகராட்சி ஆணையா் சி.மனோகரன் கூறுகையில், பெருமாநல்லூரில் இருந்து ஒப்பந்ததாரா் மூலம் தயாரித்து கொண்டுவரப்படும் உணவுகள் நகராட்சி அலுவலகம், வாரச்சந்தை, செம்மாண்டம்பாளையம், எல்.கே.சி. நகா், மூலனூா் சாலை நீருந்து நிலையம் ஆகிய 5 இடங்களில் தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments