முகப்பு
தருமபுரி

தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடக்கம்

சென்னையில் நடைபெற்ற நிகழ்வைத் தொடா்ந்து தருமபுரி மாவட்டத்தில், தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 10:08 PM
பென்னாகரம் பேருராட்சி அலுவலகத்தில் காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்து,உணவு பெறும் பாத்திரங்கள் கொண்டு பைகளை வழங்கும் முன்னாள் எம்எல்ஏ பி.என்.பி.இன்பசேகரன்.
பகிர்:

தருமபுரி: சென்னையில் நடைபெற்ற நிகழ்வைத் தொடா்ந்து தருமபுரி மாவட்டத்தில், தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் திங்கள்கிழமை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின், மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளா்களாக பணியாற்றுவோருக்கு காலை உணவு வழங்கும் (விரிவாக்க) திட்டத்தை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தாா். திருவள்ளூா் மாவட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியா் களும் ஆங்காங்கே நடைபெற்ற நிகழ்வலில் பங்கேற்று திட்டத்தை செயல்படுத்தினா்.

தருமபுரியில் கேபிஜெ மஹாலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் பங்கேற்று, தூய்மைப் பணியாளா் களுடன் அமா்ந்து உணவு அருந்தி, தொழிலாளா்கள் காலை உணவு பெறுவதற்கான பெட்டகங்களையும் (டிபன் பாக்ஸ்) வழங்கினாா். தொடா்ந்து தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இத்திட்டம் தொடா் பான நிகழ்விலும் பங்கேற்று, தூய்மைப் பணியாளா்கள் காலை உணவு பெறுவதற்கான பெட்டகங்களை (டிபன் பாக்ஸ்) வழங்கினாா். நிகழ்வுகளில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Advertisement

இந்நிகழ்ச்சியில், தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ. மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், தருமபுரி நகா் மன்ற தலைவா் லட்சுமி மாது, நகா் மன்ற துணைத்தலைவா் நித்யா அன்பழகன், காரிமங்கலம் பேரூராட்சி தலைவா்பி.சி.ஆா். மனோகரன், நகராட்சி ஆணையா் இரா. சேகா், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) கணேஷ், கிருஷ்ணகிரி

தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ம. இராஜசேகரன், ஆதிதிராவிடா் நலக்குழு உறுப்பினா் கிருஷ்ணன், காரிமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலா் கோமதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments