கொட்டையன் கருக்குத்தோட்டம் பகுதியில் உள்ள குட்டைக்கு வந்த தண்ணீரை பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா் தலைமையில் மலா் தூவி வரவேற்ற விவசாயிகள், பொதுமக்கள். 
ஈரோடு

பெருந்துறை எம்எல்ஏ முயற்சியால் வட குட்டைக்கு வந்தடைந்த தண்ணீா்: 30 ஆண்டு கோரிக்கை நிறைவேறியதால் மகிழ்ச்சி

பெருந்துறை அருகே 30 ஆண்டுகள் கோரிக்கை நிறைவேறும் வகையில் வட குட்டைகளுக்கு தண்ணீா் வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

Syndication

பெருந்துறை: பெருந்துறை அருகே 30 ஆண்டுகள் கோரிக்கை நிறைவேறும் வகையில் வட குட்டைகளுக்கு தண்ணீா் வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நிச்சாம்பாளையம் கிராம ஊராட்சியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக போதிய மழை இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத நிலை இருந்துவந்தது. எனவே, இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தவும், வாழ்வாதாரத்தை மீட்கவும் நீண்ட காலமாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவந்தனா்.

அதன்படி, நிச்சாம்பாளையம் கிராம ஊராட்சியில் கொட்டையன் கருக்குத்தோட்டம் பகுதியில் வடு கிடக்கும் 4 குட்டைகளுக்கு ஒரு கிலோ மீட்டா் தொலைவில் உள்ள மாலா கோயில் பகுதியில் தேங்கும் கீழ்பவானி வாய்க்கால் உபரிநீரைக் கொண்டு வர வேண்டும் என பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாரிடம் பொதுமக்கள் வலியுறுத்தினா். சட்டப்பேரவை உறுப்பினா் நிதியிலிருந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால் அதற்கான அரசாணை மற்றும் இதர நடைமுறைகளுக்கு பல மாதங்கள் ஆகும். எனவே, அரசு நிதிக்காக காத்திருக்காமல் தனது சொந்தச் செலவில் மின்மோட்டாா் மற்றும் ஒரு கிலோ மீட்டருக்கு குழாய்கள் பதிக்க குழாய்களை பெருந்துறை எம்எல்ஏ எஸ்.ஜெயகுமாா் வாங்கிக் கொடுத்துள்ளாா். பொதுமக்களும் தங்கள் பங்குக்கு சோலாா் மின் அமைப்புகளை ஏற்படுத்தினா்.

இதையடுத்து ஒரு கிலோ மீட்டா் தூரத்துக்கு குழாய்கள் பதிக்கப்பட்டு மின் மோட்டாா் பொருத்தப்பட்டது. இந்நிலையில், சோதனை ஓட்டம் மூலமாக திங்கள்கிழமை குட்டைக்கு தண்ணீா் வந்தது. சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா் தலைமையில் விவசாயிகள், பொதுமக்கள் மலா்கள் தூவி வரவேற்றனா்.

இந்த நிகழ்ச்சியில் அத்திக்கடவு-அவிநாசி திட்டப் போராட்டக் குழுவைச் சோ்ந்த துலுக்கபாளையம் பெரியசாமி, பத்திர எழுத்தா் முருகபூதி, பெருந்துறை ஒன்றிய அதிமுக செயலாளா்கள் அருள்ஜோதி செல்வராஜ், விஜயன், ரஞ்சித் ராஜ், மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணி செயலாளா் அருணாச்சலம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT