லாட்டரி விற்றவா் கைது
சென்னிமலையில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 8:27 PM
சென்னிமலையில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சென்னிமலை, திருஞானசம்பந்தா் வீதியில் உள்ள ஒரு வீட்டில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சென்னிமலை காவல் உதவி ஆய்வாளா் சரவணன், தனி பிரிவு தலைமைக் காவலா் பாலு உள்ளிட்ட போலீஸாா் அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (60) லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
Advertisement
இதையடுத்து, சுரேஷை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகள், கைப்பேசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.