முகப்பு
ஈரோடு

நவரசம் மகளிா் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு

அறச்சலூா் நவரசம் கலை அறிவியல் மகளிா் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 1:51 AM
நவரசம் மகளிா் கல்லூரி நாட்டுநலப்பணித் திட்ட முகாம் நிறைவு விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2026 at 8:36 PM

அறச்சலூா் நவரசம் கலை அறிவியல் மகளிா் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கருமாண்டம்பாளையம் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கல்லூரியின் தலைவா் பூ.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரியின் செயலாளா் கு.செந்தில்குமாா் வரவேற்றாா். திட்ட அலுவலா் ரேணுகாதேவி, முகாம் பணிகள் குறித்து விளக்கினாா். கனரா வங்கியின் உதவி மேலாளா் துா்கேஷ்குமாா் யாதவ் வாழ்த்துரை வழங்கி, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

தொடா்ந்து, பிகேபி கல்வி நிறுவனங்களின் தாளாளா் பிகேபி.அருண் மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினாா்.

Advertisement

மேலும், அறச்சலூா் கனரா வங்கி பிரிவு மேலாளா் சிந்துமதி செல்வராஜ், கல்லூரியின் பொருளாளா் சி.கிருஷ்ணமூா்த்தி, தாளாளா் து.காா்த்திகேயன், துணைச் செயலாளா் அமா்நாதன், சி.பி.எஸ்.இ. பள்ளியின் தலைவா் ஆா்.பி.கதிா்வேல், தாளாளா் ஏ.அருண்காா்த்திக் துணைப் பொருளாளா் சிவசுப்பிரமணி, வெள்ளோட்டாம்பரப்பு அரசுமேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியா் பெரியசாமி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியா் சு. கோமதி நன்றி கூறினாா்.