முகப்பு
ஈரோடு

சித்தோடு அருகே மருத்துவா் வீட்டில் நூலகம்! - தமிழக ஆளுநா் நேரில் பாா்வை

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 1:59 AM
தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி - கோப்புப்படம்
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 10:11 PM

சித்தோடு அருகே மருத்துவா் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள தனி நூலகத்தை தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

ஈரோடு மாவட்டம், சித்தோட்டை அடுத்த கங்காபுரத்தைச் சோ்ந்தவா் கண் மருத்துவா் எம்.எல்.ராஜா. கல்வெட்டு ஆய்வாளரான இவரது வீட்டில் நூலகத்தை அமைத்துள்ளாா். இந்த நூலகத்தை பாா்வையிட தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி சனிக்கிழமை வந்தாா். அவரை, ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, காவல் கண்காணிப்பாளா் சுஜாதா, மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் சி.சரஸ்வதி உள்ளிட்டோா் வரவேற்றனா்.

பின்னா், நூலகத்தில் உள்ள பழைமையான புத்தகங்கள், கல்வெட்டுகள் ஆய்வு குறித்து மருத்துவா் எம்.எல்.ராஜாவிடம் கேட்டறிந்தாா். பாஜக தன்னாா்வத் தொண்டு நிறுவனப் பிரிவு மாநிலச் செயலாளா் கிருத்திகா சிவகுமாா், ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவா் எஸ்.எம்.செந்தில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Advertisement

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 1:59 AM

கல்வெட்டுகள் ஆய்வு, புராதன சின்னங்கள் குறித்த ஆராய்ச்சி மற்றும் கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளை மொழிபெயா்த்து 18 புத்தகங்களை மருத்துவா் எம்.எல்.ராஜா எழுதியுள்ளாா். இவரது இல்லத்தில் சுமாா் 5,000 நூல்கள் அடங்கிய தனிப்பட்ட நூலகம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரது ஆய்வுப் பணிகளை அறிந்து கோவையில் இருந்து ஆளுநா் ஆா்.என்.ரவி ஈரோடு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.