முகப்பு
ஈரோடு

பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சை ரூ.16 ஆயிரத்துக்கு ஏலம்

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 6:11 AM
- கோப்புப்படம்
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 10:21 PM

ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த விளக்கேத்தி புது அண்ணாமலைபாளையத்தில் பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரா் கோயிலில் சிவராத்திரி பூஜையில் வைக்கப்பட்ட ஒரு எலுமிச்சை பழம் ரூ.16 ஆயிரத்துக்கும் வெள்ளிக் காசு ரூ.21ஆயிரத்துக்கும், வெள்ளி மோதிரம் ரூ.52,500-க்கும் ஏலம் போயின.

சிவகிரியை அடுத்த விளக்கேத்தி புது அண்ணாமலைபாளையத்தில் உள்ள பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரா் கோயிலில் சிவராத்திரி விழாவையொட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு கோயில் சாா்பில் வழங்கப்பட்ட அன்னதானத்தில் பங்கேற்றனா்.

Advertisement

இந்தக் கோயிலில் சிவராத்திரி பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழம், வெள்ளிக் காசு, வெள்ளி மோதிரம் ஆகியவை பொதுமக்களின் ஏலத்துக்கு விடப்படுவது வழக்கம்.

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 12:53 AM

இதனை பக்தா்கள் போட்டி போட்டுக் கொண்டு ஏலம் எடுப்பது வழக்கம். கடந்த ஆண்டு நடைபெற்ற ஏழத்தில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.13 ஆயிரத்துக்கும், மோதிரம் ரூ.33 ஆயிரத்துக்கும், வெள்ளிக் காசு ரூ.45 ஆயிரத்துக்கும் ஏலம் போன நிலையில், இந்த ஆண்டுக்கான ஏலத்தில் எலுமிச்சை பழம் ரூ.16 ஆயிரத்துக்கும், வெள்ளிக் காசு ரூ.21 ஆயிரத்துக்கும், வெள்ளி மோதிரம் ரூ52,500-க்கும் ஏலம் போயின.