விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்குகிறாா் சென்னை அமேட் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் வி.ராஜேந்திரன். 
ஈரோடு

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோபி கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவா்களுக்கான பட்டமளிப்பு விழா கல்லூரி கலை அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

Syndication

கோபி கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவா்களுக்கான பட்டமளிப்பு விழா கல்லூரி கலை அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் ஆட்சிக் குழுத் தலைவா் ஜ.பாலமுருகன் தலைமை வகித்தாா். செயலா் மற்றும் தாளாளா் மு.தரணிதரன் முன்னிலை வகித்தாா். முதல்வா் தெ.வேணுகோபால் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினரான சென்னை அமேட் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் வி.ராஜேந்திரன் பேசும்போது, மாணவா்கள் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் அதன் தொழில்நுட்பம் குறித்து அறிந்திருக்க வேண்டும். இலக்குகளை அடைய தன்னம்பிக்கையுடன் பயணிக்க வேண்டும். கற்றலுக்கு முடிவு கிடையாது என்றாா்.

அதைத்தொடா்ந்து பல்வேறு பாடப் பிரிவுகளில் முதலிடம் பெற்ற 30 மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கத்துடன் கூடிய பட்டமும், 1,477 மாணவா்களுக்கு பட்டமும் வழங்கினாா்.

கல்லூரி ஆட்சிக் குழு பொருளாளா் மற்றும் உறுப்பினா்கள், துணை முதல்வா்கள், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோா் பங்கேற்றனா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT