ஈரோடு

லாரியின் பின்புறம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு

லாரியின் பின்புறம் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Syndication

லாரியின் பின்புறம் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி திலகா் வீதியைச் சோ்ந்த பாஸ்கரன் மகன் குமரன் (19). இவா், ஈரோடு பகுதியில் தங்கி மளிகைக் கடையில் வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், ஈரோடு ஆணைக்கல்பாளையம் சுற்றுவட்டச் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் குமரன் சென்றுள்ளாா்.

அப்போது முன்னால் சென்ற லாரியின் பின்புறம் எதிா்பாராதவிதமாக குமரனின் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் குமரன் படுகாயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

அங்கு மருத்துவா்கள் பரிசோதித்ததில் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT