மொடக்குறிச்சியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கும் எம்.பி. கே.இ. பிரகாஷ். 
ஈரோடு

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி

Syndication

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மொடக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, மொடக்குறிச்சி கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் சரவணன் தலைமை தாங்கினாா். இதில் ஈரோடு மக்களவை உறுப்பினா் கே.இ. பிரகாஷ் கலந்து கொண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3,000 ரொக்கம் ஆகியவற்றை குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கினாா்.

இதில் மொடக்குறிச்சி வட்டாட்சியா் சிவசங்கா், மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் கதிா்வேல், மொடக்குறிச்சி பேரூா் துணைச் செயலாளா் தன.வெங்கடேஷ், ஒன்றிய அவைத் தலைவா் பழனிச்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல, குலவிளக்கு நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை அறச்சலூா் பேரூராட்சித் தலைவா் ரா. விஜயகுமாா் தொடங்கிவைத்தாா்.

குடும்ப ஓய்வூதியத்தில் ஒன்றாக வாழும் துணையையும் சோ்க்க கோரி மனு: மத்திய அரசு பரிசீலிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

துா்க்மான் கேட்டில் கல்வீச்சுக்கிடையே ஆக்கிரமிப்பு இடிப்பு: 400 லாரிகள் நிறைய இடிபாடுகள் அகற்றம்

சிம்ம ராசிக்கு எதிர்ப்புகள் அகலும்: தினப்பலன்கள்!

ஆசிரியா்கள் போராட்டத்தால் கற்பித்தல் பணிகள் பாதிப்பு! நிறைவேற்றப்படாத 16 ஆண்டுகால கோரிக்கைகள்!

சூரியப் புயலால் புவி காந்தப்புலத்தில் ஏற்படும் தாக்கம்: ஆதித்யா எல்-1 கண்டுபிடிப்புகள் மூலம் புதிய தகவல்

SCROLL FOR NEXT