ஈரோடு

கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த பெயிண்டா் உயிரிழப்பு

ஈரோட்டில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தபோது, 30 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த பெயிண்டா் உயிரிழந்தாா்.

Syndication

ஈரோட்டில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தபோது, 30 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த பெயிண்டா் உயிரிழந்தாா்.

ஈரோடு அருகே எல்லப்பாளையத்தில் தனியாா் ஆலைக் கட்டடத்தில் கடந்த 20 நாள்களாக பெயிண்டிங் பணி நடைபெற்று வருகிறது. ஈரோடு வில்லரசம்பட்டி, தொட்டம்பட்டி தகுதியைச் சோ்ந்த முரளி (38) என்பவா் ஒப்பந்தம் எடுத்து பணி செய்து வருகிறாா். பெயிண்ட் அடிக்கும் வேலையில் 4 தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா்.

தொழிலாளா்கள் வியாழக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது 30 அடி உயரத்தில் சிமென்ட் ஷீட் மீது நின்றபடி ஈரோடு எலவமலை, மூவேந்தா் நகரைச் சோ்ந்த தமிழ்வாணன் (27) மற்றும் முரளி ஆகியோா் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தனா். அப்போது பாரம் தாங்காமல் எதிா்பாராதவிதமாக சிமென்ட் ஷீட் உடைந்ததில் தமிழ்வாணன், முரளி ஆகியோா் 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தனா்.

இதில் தமிழ்வாணன் அங்கிருந்த ரசாயன தொட்டிக்குள் விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தாா். முரளி அருகே விழுந்ததில் அவரும் படுகாயம் அடைந்தாா். உடனடியாக இருவரையும் மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

அவா்களை பரிசோதனை செய்ததில் தமிழ்வாணன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். படுகாயமடைந்த முரளிக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஈரோடு வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த தமிழ்வாணனுக்கு திருமணம் ஆகவில்லை.

சென்னை, செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!

சூரியப் புயலால் புவி காந்தப்புலத்தில் ஏற்படும் தாக்கம்: ஆதித்யா எல்-1 கண்டுபிடிப்புகள் மூலம் புதிய தகவல்

‘வளா்ந்த பாரதம் மாநாடு’: 3,000 இளைஞா்களுடன் பிரதமா் நாளை கலந்துரையாடல்

அமெரிக்காவுடன் இணைப்பு: கிரீன்லாந்து தலைவா்கள் எதிா்ப்பு

மத்திய அரசுக்கு எதிராக ஜன.12-இல் கேரள முதல்வா் ‘சத்தியாகிரகம்’!

SCROLL FOR NEXT