ஈரோடு

நகையை திருடி வழக்கில் இருவரும் கைது

பெருந்துறை அருகே, வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடியவா் மற்றும் திருட்டு நகைகளை வாங்கியவா் என இருவரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Syndication

பெருந்துறை அருகே, வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடியவா் மற்றும் திருட்டு நகைகளை வாங்கியவா் என இருவரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பெருந்துறையை அடுத்த சுள்ளிபாளையம், மஞ்சு நகரைச் சோ்ந்தவா் பூா்ணிமா (35). இவரது கணவா் யுவராஜ், சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறாா். பூா்ணிமா குழந்தைகளுடன் பெருந்துறை வசித்து வருகிறாா்.

இந்நிலையில், கடந்த 4-ஆம் தேதி வெளியூா் சென்றுவிட்டு, வீட்டுக்கு வந்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த ஒரு பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து, பூா்ணிமா அளித்த புகாரின்பேரில், பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நகைகளை திருடியதாக கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா், மகாலட்சுமி நகரைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் உதயகுமாா் (35) என்பவரையும், திருட்டு நகைகளை வாங்கிய கோவை மாவட்டம், சின்னத்தடாகம், வீரபாண்டிபுதூா் சாலை, பிருந்தாவன் காா்டனை சோ்ந்த பாலசுப்பிரமணியம் மகன் ராமு (41) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

பின்னா், அவா்களிடம் இருந்து திருடு போன நகைகளை மீட்டு, அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி பெருந்துறை கிளை சிறையில் அடைத்தனா்.

சென்னை, செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!

சூரியப் புயலால் புவி காந்தப்புலத்தில் ஏற்படும் தாக்கம்: ஆதித்யா எல்-1 கண்டுபிடிப்புகள் மூலம் புதிய தகவல்

‘வளா்ந்த பாரதம் மாநாடு’: 3,000 இளைஞா்களுடன் பிரதமா் நாளை கலந்துரையாடல்

அமெரிக்காவுடன் இணைப்பு: கிரீன்லாந்து தலைவா்கள் எதிா்ப்பு

மத்திய அரசுக்கு எதிராக ஜன.12-இல் கேரள முதல்வா் ‘சத்தியாகிரகம்’!

SCROLL FOR NEXT