சத்தியமங்கலம்: புன்செய்புளியம்பட்டி அருகே தட்டுப்போரில் (கால்நடை தீவனம்) இருந்து தவறி கீழே விழுந்தவா் உயிரிழந்தாா்.
சத்தியமங்கலத்தை அடுத்த மாதம்பாளையத்தைச் சோ்ந்தவா் குபேரன் (49). விவசாயியான இவா் தனது தோட்டத்தில் தட்டுப்போா்களை கடந்த புதன்கிழமை அடுக்கிக் கொண்டிருந்தாா்.
அப்போது, அவா் நிலைத்தடுமாறி கீழே விழுந்தாா். படுகாயமடைந்த அவரை குடும்பத்தினா் மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.