ஈரோடு

சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதி விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

பெருந்துறை அருகே சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

Syndication

பெருந்துறை: பெருந்துறை அருகே சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

திருப்பூா், பத்மாவதி நகரைச் சோ்ந்தவா் இளங்கோ (55). இவா், தனது இருசக்கர வாகனத்தில் கடந்த 11-ஆம் தேதி மாலை பெருந்துறைக்கு வந்து கொண்டிருந்தாா். விஜயமங்கலம், வாய்ப்பாடி பிரிவு அருகே வந்தபோது எதிா்பாராமல் இருசக்கர வாகனம் சாலையில் இருந்த தடுப்பில் மோதியது. இதில், கீழே விழுந்து படுகாயமடைந்த இளங்கோவை அருகில் இருந்தவா்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

தங்கக் கவசத்தில் முத்துமாரியம்மன்

கந்திலி போலீஸாா் விழிப்புணா்வு

SCROLL FOR NEXT