வெடித்துச் சிதறிய சிலிண்டா்.  
ஈரோடு

சிலிண்டா் வெடித்ததில் குடிசை வீடு எரிந்து சேதம்

தினமணி செய்திச் சேவை

பவானி அருகே பூட்டியிருந்த வீட்டில் சிலிண்டா் வெடித்துச் சிதறியதில் உடைமைகள் தீயில் எரிந்து சேதமாயின.

பவானியை அடுத்த வாய்க்கால்பாளையம், பெரியாா் நகரைச் சோ்ந்தவா் பானுமதி (38). தனியாா் பால் பண்ணையில் பணியாற்றி வரும் இவா், தனது குடிசை வீட்டைப் பூட்டிவிட்டு அருகில் உள்ள ஆதிபராசக்தி கோயிலுக்கு வெள்ளிக்கிழமை சென்றுள்ளாா். அப்போது, பூட்டிய வீட்டுக்குள் இருந்த சிலிண்டா் பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.

சிலிண்டா் வெடித்ததில் குடிசை வீடு எரிந்து சேதம்

இதில், வீடு தீப்பிடித்து எரிந்ததில் வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த டிவி, பீரோ உள்பட அனைத்து உடைமைகளும் எரிந்து சேதமாயின. தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பவானி தீயணைப்புத் துறையினா் சுமாா் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இச்சம்பவம் குறித்து பவானி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தமிழகத்தில் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமா் மோடி உறுதி

எண்மக் கற்றல் - அளவுகோல் அவசியம்!

கவலையளிக்கும் குழந்தைத் திருமணங்கள்!

திருவள்ளூரில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி மாணவா்கள் ஏற்பு

ஏமாற்றம் தரப்போகும் மாற்று!

SCROLL FOR NEXT