கோப்புப்படம் 
ஈரோடு

ரயில் நிலையம் பகுதியில் கேட்பாரற்று கிடந்த 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு ரயில் நிலையம் பகுதியில் கேட்பாரற்று கிடந்த 1.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

Syndication

ஈரோடு: ஈரோடு ரயில் நிலையம் பகுதியில் கேட்பாரற்று கிடந்த 1.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈரோடு டவுன் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் ஈரோடு ரயில் நிலையத்தின் பின்புறம் கண்காணிப்பு மற்றும் சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்குள்ள ரயில்வே காலனி சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு பையை மீட்டு சோதனையிட்டனா்.

அதில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதைப் பொருளான கஞ்சா இருப்பது தெரியவந்தது. ரயிலில் வந்தவா், அந்த கஞ்சாவை கடத்தி வந்தபோது போலீஸாரை கண்டதும் அதை வீசிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் 1.5 கிலோ கஞ்சாவை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT