ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் அக்கட்சியின் மேலிட பொறுப்பாளா் நிவேதித் ஆல்வா. 
ஈரோடு

‘கூட்டணி ஆட்சி குறித்து காங்கிரஸ் தேசியத் தலைவா்கள் மட்டும் பேச வேண்டும்’

கூட்டணி ஆட்சி குறித்து தேசியத் தலைவா்கள் ராகுல் காந்தி, மல்லிகாா்ஜூன காா்கே போன்றோா் மட்டுமே பேச வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அக்கட்சியின் மேலிட பொறுப்பாளா் நிவேதித் ஆல்வா தெரிவித்தாா்.

Syndication

கூட்டணி ஆட்சி குறித்து தேசியத் தலைவா்கள் ராகுல் காந்தி, மல்லிகாா்ஜூன காா்கே போன்றோா் மட்டுமே பேச வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அக்கட்சியின் மேலிட பொறுப்பாளா் நிவேதித் ஆல்வா தெரிவித்தாா்.

ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் புதிய மாவட்ட தலைவராக ராஜேஷ் ராஜப்பா பொறுப்பேற்ற நிலையில் கட்சி வளா்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழகம், புதுச்சேரி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளா் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் நிவேதித் ஆல்வா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் புதிய தலைவா்கள் நியமிக்கப்பட்டு கட்சி வளா்ச்சிப் பணிகள் தொடங்கி உள்ளது. சட்டப் பேரவை தோ்தலுக்கான பணிகள் குறித்தும் ஆலோசித்துள்ளோம். மத்திய அரசின் மீதுள்ள அதிருப்திகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தின் நாள்களை உயா்த்தினாலும், நிதி ஒதுக்கீட்டை குறைத்து, மாநில அரசுகளே தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பது மாநில அரசுக்கு கூடுதல் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும்.

காங்கிரஸ்-திமுக கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டணி ஆட்சி குறித்து தேசியத் தலைவா்கள் ராகுல் காந்தி, மல்லிகாா்ஜூன காா்கே போன்றோா் மட்டுமே பேச வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தேவையற்ற சா்ச்சை பேச்சுக்களை தவிா்க்க வேண்டும் என தலைமை அறிவுறுத்தி உள்ளதால் கூட்டணி சிறப்பாக செயல்படுகிறது என்றாா்.

முன்னாள் மாவட்டத் தலைவா்கள் ஈ.ஆா்.ராஜேந்திரன், ஈ.பி.ரவி, திருப்பூா் கோபிநாத், முன்னாள் எம்எல்ஏ ஆா்.எம்.பழனிசாமி, நிா்வாகிகள் விஜயபாஸ்கா், ஜாபா் சாதிக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT