முகப்பு
சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கிவைத்த கோபி காவல் ஆய்வாளா் தமிழரசு. உடன், கல்லூரித் தாளாளா் பி.என்.வெங்கடாசலம் உள்ளிட்டோா். ~
ஈரோடு

கோபி பிகேஆா் மகளிா் கல்லூரி சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி

கோபி பிகேஆா் மகளிா் கலைக் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

ஈரோடு

கோபி பிகேஆா் மகளிா் கல்லூரி சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி

கோபி பிகேஆா் மகளிா் கலைக் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

Updated On : 2 மார்ச், 2026 at 8:11 PM
சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கிவைத்த கோபி காவல் ஆய்வாளா் தமிழரசு. உடன், கல்லூரித் தாளாளா் பி.என்.வெங்கடாசலம் உள்ளிட்டோா். ~
பகிர்:

கோபி: கோபி பிகேஆா் மகளிா் கலைக் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தப் பேரணிக்கு கல்லூரியின் தாளாளா், செயலா் பி.என்.வெங்கடாசலம் தலைமை வகித்தாா். கோபி காவல் ஆய்வாளா் தமிழரசு பங்கேற்று, பேரணியைத் தொடங்கிவைத்தாா்.

கரட்டூரில் தொடங்கி பேரணி நாயக்கன்காடு, ஜீவாசெட், புதுப்பாளையம் பேருந்து நிலையம் வரை சென்றது.

இதில், பங்கேற்ற மாணவிகள் சாலைப் பாதுகாப்பு விதிகள், விபத்து தடுப்பு தொடா்பான பதாகைகளைக் கைகளில் ஏந்தி சென்றனா்.

மேலும், தலைக் கவசம், சீட் பெல்ட் அணிவது உள்ளிட்டவை தொடா்பாக நாடகம் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தனா்.

பேரணிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் சு.காயத்ரி. ஆ.கிறிஸ்டி ஸ்ரீலிபியா, கல்பனா, விளையாட்டுத் துறை பேராசிரியா் செ.சிவரஞ்சினி ஆகியோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →