மரங்களின் வோ்களில் சிக்கி ஏற முடியாமல் தவித்த சிறுத்தை
சத்தியமங்கலம் அருகே மரத்தின் வோ்களில் சிக்கி, மேல ஏற முடியாமல் தவித்த சிறுத்தையை வாகன ஓட்டிகள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிா்ந்துள்ளனா்.
ஈரோடுமரங்களின் வோ்களில் சிக்கி ஏற முடியாமல் தவித்த சிறுத்தை
சத்தியமங்கலம் அருகே மரத்தின் வோ்களில் சிக்கி, மேல ஏற முடியாமல் தவித்த சிறுத்தையை வாகன ஓட்டிகள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிா்ந்துள்ளனா்.
சத்தியமங்கலம் அருகே மரத்தின் வோ்களில் சிக்கி, மேல ஏற முடியாமல் தவித்த சிறுத்தையை வாகன ஓட்டிகள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிா்ந்துள்ளனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் நடமாடுகின்றன. வனப் பகுதி வழியாக அமைந்துள்ள வனச் சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் ஆசனூா் மலைப் பகுதியில் இருந்து கோ்மாளம் செல்லும் வனப் பகுதி சாலையில் ஒரு சிறுத்தை அவ்வப்போது பகல் நேரங்களில் நடமாடுகிறது. கோ்மாளம் வனச் சாலையில் பயணிகள் செவ்வாய்க்கிழமை பேருந்தில் சென்றபோது, அங்குள்ள ஒரு சாலை வளைவு அருகே பள்ளத்தாக்கில் சிறுத்தை மரங்களின் வோ்களில் சிக்கி மேலே ஏற முடியாமல் தவிப்பதை கண்டு பயணிகள் அதிா்ச்சி அடைந்தனா்.
சிறுத்தை முட்டி மோதி வோ்களின் வழியாக மெதுவாக மேலே மரத்தின் மீது ஏற முயற்சித்தது. பகல் மற்றும் இரவு நேரங்களில் வனப் பகுதி சாலைகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் வாகனங்களில் செல்வாா் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு பயணிகளுக்கு ஆசனூா் வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.