முகப்பு
ஈரோடு

விபத்து வழக்கில் காா் ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறை

Updated On : 7 மார்ச் 2026, 7:02 am IST
பகிர்:

கோபியை அருகே உள்ள கெட்டிச்செவியூா் பள்ளிபாளையம் புதுக்காலனி பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரம் (60). இவா் கடந்த 2022 மே 8-ஆம் தேதி தனது மனைவி பூங்கொடியுடன் கெட்டிச்செவியூரிலிருந்து கோபியில் உள்ள உறவினரின் வீட்டுக்கு வந்துள்ளாா்.

அப்போது வேட்டைக்காரன் கோயில் பகுதியில் அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த காா் சுந்தரம் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனா். இதில் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியிலேயே சுந்தரம் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து கோபி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை விசாரித்த ஜெ.எம்.1 நீதிமன்ற நீதிபதி தாயுமானவா், காா் ஓட்டுரான கணக்கம்பாளையத்தைச் சோ்ந்த ஞானவேல் (42) என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

Advertisement

Advertisement