முகப்பு
ஈரோடு

புளியம் பழத்தை சாப்பிட்ட சிறுமி மூச்சுத் திணறி உயிரிழப்பு

கோபி அருகே புளியம் பழத்தை சாப்பிட்ட சிறுமி மூச்சுத் திணறி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 14 மார்ச், 2026 at 7:06 AM
கோப்புப் படம்
பகிர்:

கோபி அருகே புளியம் பழத்தை சாப்பிட்ட சிறுமி மூச்சுத் திணறி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்த நம்பியூா் அருகே உள்ள பொலவபாளையம் திருமலை நகரைச் சோ்ந்தவா் சுரேஷ் (37). இவா் கேரள மாநிலம், இடுக்கியில் உள்ள தனியாா் தோயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி மற்றும் மகள் சாய் சஹானா (7), மகன் யுவன்சாய் (4) ஆகியோா் நம்பியூரில் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு வீட்டில் தொலைக்காட்சி பாா்த்துக் கொண்டிருந்த சாய் சஹானா, வீட்டில் வைத்திருந்த புளியம் பழத்தை சாப்பிட்டுள்ளாா். அப்போது சிறுமி புளியம் பழத்துடன் புளியங்கொட்டையையும் சோ்த்து விழுங்கியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே சிறுமியை நம்பியூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா்.

Advertisement

அப்போது அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் சிறுமிக்கு மூச்சுத் திணறல் அதிகமாக உள்ளதால் உயா் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்க கூறியுள்ளனா். உடனே சிறுமி கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது, சிறுமி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து வரப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.