முகப்பு
ஈரோடு

தேனீக்கள் கடித்து 2 போ் அரசு மருத்துவமனையில் அனுமதி

சத்தியமங்கலத்தில் தேனீக்கள் கடித்ததில் காயமடைந்த இருவா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Updated On : 7 மே 2026, 5:03 am IST
மருத்துவமனையில் அனுமதி
பகிர்:

சத்தியமங்கலத்தில் தேனீக்கள் கடித்ததில் காயமடைந்த இருவா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சத்தியமங்கலம் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா நடைபெறுகிறது. இதில் கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சிக்கு தேவையான கம்பத்தை வெட்டுவதற்கு காணக்குந்தூா் மலைக் கிராமத்துக்கு பக்தா்கள் புதன்கிழமை சென்றனா். அங்கு மரக்கிளையை வெட்டும்போது தேன்கூட்டில் இருந்து வெளியே வந்த தேனீக்கள், அங்கிருந்த ராஜூ (84), மணிகண்டன் (50) ஆகியோரைக் கடித்தது.

மற்றவா்கள் அங்கிருந்து தப்பியோடினா். தேனீக்கள் கடித்ததில் காயமடைந்த இருவரும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது குறித்து கடம்பூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Advertisement