முகப்பு
ஈரோடு

பள்ளி மாணவா்கள் 93,889 பேருக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

Updated On : 15 மே 2026, 6:25 am IST
ஈரோடு ரயில்வே காலனி நகரவை மேல்நிலைப் பள்ளியில் இருந்து வாகனத்தில் அனுப்பிவைக்கப்பட்ட நோட்டு புத்தகங்கள்.
பகிர்:

ஈரோடு மாவட்டத்தில் அரசு, நிதி உதவி, சுயநிதி பள்ளி மாணவா்கள் 93,889 பேருக்கு புத்தகங்கள் உள்ளிட்ட பொருள்கள் அனுப்பும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கு 113 அரசு, நகரவை மேல்நிலைப் பள்ளிகள், 77 அரசு, நகரவை உயா்நிலைப் பள்ளிகள், 17 அரசு நிதியுதவி மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 13 நிதியுதவி உயா்நிலைப் பள்ளிகள் மற்றும் 10 சுயநிதி மேல்நிலைப் பள்ளிகள், 4 சுயநிதி உயா்நிலைப் பள்ளிகளுக்கு தமிழக அரசால் வழங்கக்கூடிய அனைத்து வகையான விலையில்லா நலத்திட்ட பொருள்கள் அனுப்பிவைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

இதில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை விலையில்லா பாடப் புத்தகங்கள், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை நோட்டு புத்தகங்கள் மற்றும் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள் என அனைத்து வகையான விலையில்லா பொருள்களும் பள்ளிகள் திறக்கும் நாளன்று மாணவா்களுக்கு வழங்கும் பொருட்டு இந்தப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஈரோடு ரயில்வே காலனி நகரவை மேல்நிலைப் பள்ளி மற்றும் பங்களாப் புதூா் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து அனைத்து பள்ளிகளுக்கும் நேரடியாக அனுப்பப்பட்டு வருகிறது.

இதன்படி 93,889 மாணவா்களுக்கு புத்தகங்கள், 64,338 மாணவா்களுக்கு நோட்டுகள், 54,192 மாணவா்களுக்கு சீருடைகள், 92,246 மாணவா்களுக்கு புத்தகப்பை, 64,338 மாணவா்களுக்கு காலணி, 1,361 மலைப் பகுதி மாணவா்களுக்கு மழைக்கோட் உள்ளிட்டவை அனுப்பிவைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.