நீலகிரி

யானைக் குட்டி வீட்டுக்குள் நுழைந்து தாக்கியதில் பெண் காயம்

DIN

கூடலூரை அடுத்துள்ள கோழிப்பாலம் பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு யானைக் குட்டி வீட்டுக்குள் நுழைந்து தாக்கியதில் பெண் காயமடைந்தார்.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள கோழிப்பாலம் பகுதிக்கு உணவு மற்றும் குடிநீர் தேடி இரண்டு யானைகள் குட்டியுடனவந்துள்ளன. எதிர்பாராதவிதமாக யானைக் குட்டி அப்பகுதியில் உள்ள யாஹூ என்பவரது வீட்டுக்குள் நுழைந்தது.
அந்த யானைக் குட்டி வீட்டின் படுக்கையறைக்குள் சென்று பொருள்களை உடைத்ததுடன், கட்டிலில் கைக்குழந்தையுடன் படுத்திருந்த யாஹூவின் மருமகள் ஜுமைலாவை தாக்கியுள்ளது. இதில் அவர் காயமடைந்தார். உடனடியாக யாஹூ தப்பிச் செல்வதற்காக வீட்டின் கூரையை உடைத்து கைக் குழந்தையுடன் ஜூமைலாவை வெளியேற்றியுள்ளார்.  அதிர்ஷ்டவசமாக அனைவரும் வீட்டில் இருந்து தப்பி வெளியே வந்துவிட்டனர்.
இதையடுத்து, வீட்டுக்குள்ளிருந்த குட்டியை மீட்க வெளியே நின்ற யானைகள் வீட்டை சுற்றி வந்து கடுமையாகத் தாக்கி வீட்டின் ஒரு பகுதியை உடைத்து, குட்டியை அழைத்துக் கொண்டு காட்டுக்குள் சென்றுவிட்டன. ஜூமைலா கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT