நீலகிரி

அரசுத் துறை அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம்

DIN

அரசு அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கூடலூர் காவல் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
மூன்று மாநில வன எல்லையில் கூடலூர் அமைந்துள்ளதால் வன மாநில எல்லையோரம் உள்ள பழங்குடி கிராமங்களுக்கு அடிப்படை வசதி செய்து தருவது குறித்த ஆலோசனைக் கூட்டம் கூடலூர் டி.எஸ்.பி. ரவிசங்கர் தலைமையில் நடைபெற்றது.
வட்டாட்சியர் சிவகுமார் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களுடன் பழங்குடி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில், வனச் சரக அலுவலர் ராஜேந்திரன், வருவாய் ஆய்வாளர் சதீஷ்வேரா நாயக், கிராம நிர்வாக அலுவலர் மோசஸ், நியூஹோப் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேஷ், பயிற்சி உதவி ஆய்வாளர் உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT