நீலகிரி

உதகையில் மக்கள் குறைதீர் கூட்டம்

DIN

உதகையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு  நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

உதகையில் மக்கள் குறைதீர் கூட்டம்,  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறைதீர் கூட்டத்தில்,  குடும்ப அட்டை,  வீட்டு மனைப் பட்டா,  தொழில், கல்விக் கடன் உதவி,  முதியோர் உதவித் தொகை, சாலை,  குடிநீர்,  கழிப்பிடம், மின் வசதி உள்ளிட்டவைகள்  கோரி 177 மனுக்களை பொது மக்கள்அளித்தனர்.   இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதில், முன்னாள் படைவீரரின் கைம்பெண்கள் குடும்ப நல நிதியாகவும்,  குடும்ப நல நிதியாகவும் 3 பேருக்கு ரூ.60,000,  கண் கண்ணாடி வாங்குவதற்காக 2 பேருக்கு ரூ.6,000,  ஈமக்கிரியை மானியமாக ரூ.15,000 உள்பட நலத் திட்ட உதவிகளை ஆட்சியர்  வழங்கினார்.
உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் சுற்றுச்சூழல் துறை சார்பில்  பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து,  நீலகிரியின் சூழலைக்  காப்பதை வலியுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பரப்புரைப் பயண நாடக நிகழ்ச்சியை ஆட்சியர் தொடக்கிவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT