நீலகிரி

கூடலூர் அருகே பழங்குடியின மக்கள் சடலத்துடன் போராட்டம்

DIN

கூடலூர் அருகே  சடலத்துடன் பழங்குடியின மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூரை அடுத்துள்ள சிறிமதுரை பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மாதன் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.  அவரது சடலத்தை கிராம மக்கள் மயானத்துக்குக் கொண்டுசெல்லும்போது,  வழியில் தனது நிலத்தின் வழியாகச் சடலத்தைக் கொண்டு செல்லக் கூடாது என வாசு என்பவர் தடுத்துள்ளார்.  இதனால்,  சடலத்தைக் கொண்டு சென்றவர்களுக்கும், வாசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு,  கலைகலப்பு ஏற்பட்டது.
சடலத்தை அதே இடத்தில் வைத்து பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்குச் சென்ற கூடலூர் டி.எஸ்.பி. ரவிசங்கர், ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, சடலத்தை எடுத்துச் சென்று அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT