நீலகிரி

உதகையில் இன்று பழங்கால வாகனங்கள் கண்காட்சி

DIN

உதகையில், பழங்கால வாகனங்களின் அணிவகுப்பு மற்றும் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 6) நடைபெற உள்ளது.
நீலகிரி வின்ட்டேஜ், கிளாசிக்கல் கார் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் இந்தக் கண்காட்சி குறித்து சங்கத் தலைவர் ரஜினிகாந்த் உதகையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீலகிரி வின்ட்டேஜ், கிளாசிக்கல் கார் சங்கத்தின் சார்பில் பழங்கால வாகனங்களின் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்த அணிவகுப்பை, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தமிழகம் மாளிகை முகப்பிலிருந்து தொடக்கிவைக்கிறார்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக வரும் இந்த வாகனங்களின் அணிவகுப்பு ஊர்வலம், ஒய்டபிள்யுசிஏ மைதானத்தில் நிறைவடைய உள்ளது. அங்கு, மாலை வரை காட்சிக்காக இந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். இதில், 60-க்கும் மேற்பட்ட பழங்கால கார்கள், ஜீப்புகள், 30-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் இடம்பெறவுள்ளன. சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும் வாகனங்களுக்கு பரிசளிக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT