நீலகிரி

பள்ளி மாணவர்களுக்கு நலத் திட்ட உதவி

DIN

கூடலூரை அடுத்த  எல்லையோரத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காவல் துறை சார்பில் நலத் திட்ட உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா உத்தரவின்படி,  எல்லையோர பகுதியிலுள்ள கிராமங்களில் காவல் துறையினர்  நலத் திட்ட உதவிகளை வழங்கிவருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கூடலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிசங்கரின் மேற்பார்வையில்  ஓவேலி பகுதியிலுள்ள நியூஹோப் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட எல்லமலை ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் முதல்,  இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நியூஹோப் காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். இதில்,  தனிப் பிரிவு காவலர் மோகன்தாஸ், பள்ளித் தலைமை ஆசிரியர் அன்னம்மா,  ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT