நீலகிரி

யானை தாக்கி பெண் சாவு

DIN

முதுமலை அருகே உள்ள மாவனல்லா வனப் பகுதியில் யானை தாக்கியதில் ஆதிவாசி பெண் உயிரிழந்தார்.
 முதுமலை அருகே உள்ள மாவனல்லா, குரூப் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் மாரா (60). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த மாசி (55) என்பவரும் சேர்ந்து மாவனல்லா வனப் பகுதிக்குள் விறகு சேகரிக்க திங்கள்கிழமை மாலை சென்றுள்ளனர். அப்போது, வனப் பகுதிக்குள் நின்றிருந்த காட்டு யானை இவர்கள் இருவரையும் விரட்டியுள்ளது. இதில், யானை தாக்கியதில்
பலத்த காயமடைந்த மாரா அப்பகுதியிலேயே மயக்கமடைந்தார்.
 இதையடுத்து, யானையிடமிருந்து தப்பிய மாசி ஊருக்குள் வந்து அங்கிருந்தவர்களை அழைத்துக் கொண்டு வனத்துக்குள் சென்றுள்ளார். இதனிடையே, சிங்காரா வனச் சரகர் காந்தன் தலைமையிலான வனத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாராவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
 இதைத் தொடர்ந்து, மாராவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

நிக்கி!

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT