நீலகிரி

உதகையில் குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தம்

DIN

உதகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த குழந்தைத் திருமணம் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.
உதகை அருகே உள்ள லவ்டேல் பகுதியிலுள்ள காந்திப்பேட்டையைச் சேர்ந்த பெண்ணுக்கும், அதிகரட்டி கிராமத்தைச் சேர்ந்தவருக்கும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதில், மணப் பெண்ணுக்கு 17 வயதுதான் ஆகியுள்ளதாக அருவங்காட்டில் உள்ள சைல்டு லைன் அமைப்புக்கு ஞாயிற்றுக்கிழமை காலை தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் தேவகுமாரி, கள அலுவலர்கள் ஹேமலதா, வில்சன் தினேஷ் ஆகியோர் காந்திப்பேட்டைக்குச் சென்று இருவீட்டாரிடம் விசாரணை நடத்தினர்.
இதில், மணப் பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியடையாதது தெரியவந்தது. இதையடுத்து, திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
மேலும், மணமகன், மணப்பெண் ஆகிய இருவரையும் உதகையிலுள்ள சைல்டு வெல்பேர் கமிட்டி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வாகை சூடினாா் ஸ்வெரெவ்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

யூடிஎஸ் செயலி பிரசாரக் குழுவுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT